மாறி

by Geethalakshmi 2010-03-01 00:58:10

மாறி


மாறி (Variable) கணித்தலின்போது மாறக்கூடிய ஒரு பெறுமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குறியாகும்.

எடுத்துக்காட்டாக y என்ற மாறி, சூரிய வெப்பப் பெறுமானத்தைக் குறித்து நின்றால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பப் பெறுமானம் மாறும் பொழுது, அதற்கேற்ப yயின் பெறுமானமும் மாறும். இங்கே y என்ற மாறி வெப்பப் பெறுமானத்தை அல்லது மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாறும் நேரத்தை x என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம்.

x அல்லது நேரம் இயல்பாக மாறுகின்றது. அது எந்த ஒரு காரணிகளிலும் தங்கி அல்லது சார்ந்து இருக்கவில்லை. இத்தகைய மாறியை சாரா மாறி என்பர். ஆனால், y அல்லது சூரிய வெப்பம் நேரத்தைச் சார்ந்து இருக்கின்றது. சாதாரண ஒரு நாளில் அதிகாலையில் இள வெப்பமாகவும், நடு பகலில் உச்ச வெப்பமாகவும், மாலை வேளையில் வெப்ப நிலை தணிந்தும் இருக்கும். ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். ஆகையால் yயை சார் மாறி என்பர். மாறிகள் மேற்கூறியவாறு சாரா மாறி என்றும், சார் மாறி என்றும் இரு வகைப்படும்.

மாறி, தெரியாத ஒரு பெறுமானத்தை குறிக்கவும் பயன்படுகின்றது. கணிதச் சமன்பாடுகளில் x என்ற மாறி பொதுவாக நேரிடையாக வரையறை செய்யப்படாத ஒரு பெறுமானத்தை குறிக்கும்.
1573
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments