குறிஞ்சி - தோழி கூற்று

by Geethalakshmi 2010-03-01 01:03:26

குறிஞ்சி - தோழி கூற்று


செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

முதற் குறிப்பு:

தோழியிற் கூட்டத்தை விரும்பிய தலைவன், செங்காந்தள் பூவைத் தோழிக்குக் கையுறையாகக் கொடுத்துத் தன் குறை கூறுகையில், 'இஃது எமது மலையிலும் பெருமளவு உள்ளது, ஆதலின் இதனை வேண்டேம்' என மறுத்துக் கூறியது.

உரை:

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.
1500
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments