குறிஞ்சி - தலைவி கூற்று

by Geethalakshmi 2010-03-01 01:04:23

குறிஞ்சி - தலைவி கூற்று


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

முதற் குறிப்பு:

தலைவனின் இயல்பைப் பழித்துக் கூறிய தோழிக்குத் தலைவி பதிலாகக் கூறியது.

உரை:

மலைச்சாரலில் வளரக் கூடிய, கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் பூவிலிருந்து பெருமளவு தேன் உருவாகும் நாட்டைச் சேர்ந்தவனாகிய தலைவனிடம் நான் கொண்ட நட்பானது, இந்தப் புவியைக் காட்டிலும் பெரியது; வானை விடவும் உயர்ந்தது; கடலின் ஆழத்தை விடவும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
1497
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments