பொம்மை விமானம் மோதி இன்ஜினியர் பரிதாப சாவு

by Rameshraj 2010-03-03 10:49:59

கோலாலம்பூர்:மலேசியாவில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானம் ஒன்று தாக்கியதால், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார்.இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி:மலேசியாவின், கோலாலம்பூரில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் விமானங்களை இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது, சீன தயாரிப்பான ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானம் ஒன்று, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான முஸ்தபா உஸ்மான்(4Cool
என்பவரது தலையின் வலது பக்கம் மோதியது. இதனால், அவரது தலையில் ரத்தப் போக்கு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.


புத்ரஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முஸ்தபா உஸ்மான் நேற்று முன்தினம் உயிரிழந்தார். முஸ்தபா மீது மோதிய விமானத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்துக்கு காரணமான பொம்மை விமான உரிமையாளரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது. முஸ்தபா தன் விமானத்தை மேலெழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அப்போது 6 மீ., தொலைவில் நின்றிருந்த, விபத்துக்கு காரணமான விமானத்தின் உரிமையாளர், தன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்திருக்கும் என்று கூறப்பட்டது.

Tagged in:

1541
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments