மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்

by sabitha 2010-03-06 15:48:29

டெல்லி மாநகரத்திலிருந்து ஒரு மேஜிக் வித்தைக்காரன் விஜய நகரத்துக்கு வந்திருந்தான். அவன் மேஜிக் செய்வதில் வல்லவன்.


அவன் அரண்மனையில் மன்னர் கிருஷ்ண தேவராயர் முன்னிலையில் கல்லைப் பொன்னாக்கினான். மண்ணை சர்க்கரை ஆக்கினான். மேலும் வெறும் தாளை ரூபாய் நோட்டுக்கள் ஆக்கினான். மேலும் அவன் தலையையே வெட்டி அவன் கைகளில் ஏந்தினான். இந்நிகழ்ச்சியைப் பார்த்த மன்னர் மகிழ்ந்தார்.


அப்போது மன்னரிடத்தில் "என்னை வெல்ல உங்கள் நாட்டில் யாரேனம் உண்டா ......." என்று சவால் விட்டான். இது மன்னருக்கு பெருத்த வேதனை அளித்தது.


அறிஞர் பெருமக்கள் பலரையும் அழைத்து "டெல்லி மேஜிக் வித்தைக்காரனை உங்களில் யாரேனும் வெல்ல முடியுமா? அப்படி வென்றவருக்கு 1000 பொன்பரிசு" என்றான் மன்னர்.


"என்னால் அந்த மேஜிக வித்தைக்காரனை வெல்ல முடியும்" என்றான் தெனாலிராமன். அதைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார்.


மறுநாள் போட்டியைப் பார்க்கக் அரண்மனையில் கூட்டம் கூடிவிட்டது.


போட்டி ஆரம்பம் ஆகியது. மேஜிக் வித்தைக் காரனைப் பார்த்து தெனாலிராமன் "நான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்வேன். அதே காரியத்தைக் கண்ணைத் திறந்து கொண்டு உன்னால் செய்ய இயலுமா?" என்றான் தெனாலிராமன்


"இது என்ன பிரமாதம். நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தைக் கண்ணைத் திறந்துக்கொண்டே என்னால் செய்ய இயலும்" என்றான் மேஜிக் வித்தைக்காரன்
போட்டியை ஆரம்பி என்றான் மேஜிக் வித்தைக்காரன். உடனே தான் தயாராக வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்துக் கண்ணை மூடிக்கொண்டு கண்மேல் வைத்தான்.


"இதே வித்தையைத்தான் நான் உன்னைக் கண்ணை திறந்து கொண்டு செய்யச் சொன்னேன். செய் கார்க்கலாம்" என்றான். தன்னால் இயலாது என்றுணர்ந்த மேஜிக் வித்தைக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.


மன்னர் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி ஆயிரம் பொன் பரிசளித்தார்.

Tagged in:

2463
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments