மரியாதை
by sabitha[ Edit ] 2010-03-06 17:29:41
ஹோட்டல் கணபதியில் அன்று நல்ல கூட்டம். மிகவும்
பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சர்வர் சுந்தரம்
அப்போதுதான் தனது டேபிளில் அமர்ந்திருந்த பெரியவரை
விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தான்.
ஹோட்டல் முதலாளி ஏகாம்பரம் அதைக் கவனிக்கத் தவற
வில்லை.
அன்று இரவு சம்பளம் தரும்போதுதான் ஏகாம்பரம் சுந்தரத்திடம்
அதுபற்றிக் கேட்டார். “”ஏம்பா ! சுந்தரம், காலையில் அந்தப்
பெரியவரை விழுந்து விழுந்து கவனித்தாயே ! உனக்கு மிகவும்
தெரிந்தவரா ? உனக்கு டிப்ஸ் கூடத் தரவில்லையே !”
அய்யா அவர் எனக்கு டிப்ஸ் தருவதில்லைதான். ஆனால்,
ஒவ்வொரு முறையும் போகும் போது கல்லாவின் மேலுள்ள
உடல் ஊனமுற்றோருக்கான உண்டியலில் ஏதேனும் பணம்
போடாமல் போவதில்லை.
பிறருக்கு உதவும் நல்ல மனது அவரிடம் உள்ளது”என்று
சுந்தரம் சொல்ல, “”இப்போது உன்மீது எனக்கும் மரியாதை
வந்துவிட்டது” என்றார் ஏகாம்பரம்.