வானம்

by sabitha 2010-03-06 17:34:16

ரியாஸ் அலுவலகம் வந்தான். அவன் மேஜையில்
ஒரு வெள்ளைக் காகிதம் நான்காக மடித்து பேப்பர்
வெயிட் வைக்கப்பட்டிருந்தது. “”மானேஜர் குறிப்பு
ஏதும் எழுதி வைத்திருப்பாரோ ?” கேள்வி
முடிச்சுடன் அக்கடிதத்தை அவசரமாக எடுத்தான்,
ரியாஸ்.

அதற்குள் அலுவலகம் சுத்தம் செய்யும் அன்னம்மா
ஓடி வந்தாள். “”இது குப்பைக் கூடையில் கிடந்தது,
சார். மருந்து சீட்டு மாதிரி இருந்தது. நீங்கள் தவற
விட்டிருப்பீங்களோன்னு நினைச்சு எடுத்து வச்சேன்.”

“”ரொம்ப தேங்க்ஸ் அன்னம்மா. இந்த சீட்டைத்தான்
நேற்றையிலிருந்து தேடிக் கொண்டிருந்தேன்.” என்று
சீட்டை மடித்து சட்டைப் பையில் திணித்துக்கொண்டான்
ரியாஸ்.

பக்கத்து சீட் அருணகிரி இளப்பமாய்ச் சிரித்தார்.

“” ஏம்பா ரியாஸ். நேற்று நீ டிராயரை சுத்தம்
பண்ணுனப்போ இந்த மருந்து சீட்டைத்தானே குப்பையில்
எறிந்தாய். இப்ப என்ன அதுக்கு திடீர் முக்கியத்துவம் ?”

அன்னம்மா எடுத்துக் கொடுத்தாள் என்றா !”

“”சேச்சே ! அப்படி இல்லை, சார், அன்னம்மாவை
இப்படிப் பாராட்டினால்தான் நாளைக்கு முக்கியமான
கடிதம் தப்பித்தவறி குப்பைக் கூடையில் விழுந்திருந்தாலும்
அதை எடுத்து வைப்பாள் ” என்று சொன்னான் ரியாஸ்.

இருண்ட வானம் தெளிவானது போல் இருந்தது அவனது
விளக்கம்.

Tagged in:

2006
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments