மிஸ்டு கால்!

by sabitha 2010-03-06 18:01:02

‘’ஏங்க…நம்ப பையன் ஏகமா செலவு பண்றான்.

அவனைத் திருத்தவே முடியாதுங்களா?’’ –கவலை

அப்பிய முகத்தோடு மைதிலி கேட்டாள்.

அந்த நேரம் மேஜையில் இருந்த ரேவந்தின் செல்

சிணுங்கி உடனே அமைதியானது.

செல்லைக் கையிலெடுத்துப்பார்த்தார் சோமசுந்தரம்.

அவர் முகத்தில் பிரகாசம்!

‘’கடைசி முயற்சி இது , வா போகலாம்’’, ரேவந்தின் அறையை

நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

‘’ரேவிந்த உன் ஃப்ரண்டு மனோகிட்ட இருந்து மிஸ்டுகால் வந்திருக்கு.

பெரிய பணக்காரனான அவனே நேரடியா பேசாம சிக்கனமா

மிஸ்ட்கால்தான் கொடுக்கறான். ஆனா நீ பணத்தை தண்ணி

மாதிரி செவழிக்கற. எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமா

இருக்கியோ அவ்வளவுக்கவ்வளவு உன் வாழ்க்கை வளமா இருக்கும். இனியாவது திருந்து. இதுதான் என் கடைசி அட்வைஸ்’’

.

இரண்டு நிமிடங்கள் கரைய….

‘’அப்பா- மனோவின் மிஸ்டு கால் எனக்கு உலகத்தை புரிய

வச்சிடுச்சு. இனி நீங்க சொன்ன மாதிரி நான் நடந்துக்கறேன்’’

உறுதியான குரலில் சொன்னான் ரேவந்த்!

Tagged in:

1897
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments