புறங்கூறுதல் கூடாது!
by sabitha[ Edit ] 2010-03-06 18:03:08
ஒரு விவாகரத்து வழக்கு.
மணவிடுதலை கோருவதன் காரணம் கேட்டார் நீதிபதி.
‘’என் மனைவியின் குறைகளைச் சொல்ல நான்
விரும்பவில்லை’’ என்றார் கணவர்
உரிய விசாரணை முடிவில், நீதிபதி அத்தம்பதிகளுக்கு
மணவிடுதலை தந்தார்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர்
‘’இப்பொழுதுதான் அவள் உன் மனைவி அல்லவே அவள்
குறைகள் என்னவென்று சொல்லக்கூடாதா?’’ என்று
அவரைக் கேட்டார்.
‘’இப்பொழுது அவள் என் மனைவி அல்ல என்பது
உண்மைதான், எனக்குத் தொடர்பில்லாத ஒரு பெண்ணின்
குறைகளை வெளிப்படுத்த நான்
விரும்பவில்லை’’ என்று பதில் தந்தார் அவர்