சாமர்த்தியம்

by sabitha 2010-03-06 18:03:46

எழுத்தாளர் செல்வம் தனது நண்பன் கேசவனை தொலைபேசியில்
அழைத்த போது அவன் குளியலறையில் இருந்தான்.

சமையலறையில் இருந்து ஓடி வந்து போனை எடுத்தாள் அவனது
மனைவி தாரிகா.

ஹலோ யார் பேசறீங்க?

நான் எழுத்தாளர் செல்வம் பேசறேன். கேசவன் இருக்காரா?

அவர் குளிச்சிட்டு இருக்காரு. ரெண்டு நிமிஷத்துல வந்துடுவாரு.
உங்களைப்பற்றி என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்வார்.
நீங்க ரொம்ப நல்ல கதை எழுதுவீங்கன்னு

ரொம்ப நன்றிங்க!

பரவாயில்லைங்க இதோ என் வீட்டுக்காரரே வந்துட்டாரு! ரிசீவரை
தனது கணவனிடம் தந்து விட்டு சமையலறைக்கு நடந்தாள் தாரிகா.

கேசவன் போன் பேசி விட்டு தனது மனைவியிடம் கேட்டான். இந்த
நண்பரை பற்றி இது வரைக்கு உன்கிட்ட நான் எதுவுமே சொல்லல,
அப்புறம் எப்படி அவரை தெரிஞ்சது மாதிரி பேசுன?

உங்க நண்பர் உங்கள கேட்டப்போ யாரோ செல்வமாம் உங்க கூட
பேசணுமாம் அப்படியின்னு நான் சொல்லியிருந்தா, அது கேக்குற
உங்க நண்பர் இவ்வளவு பழக்கமிருந்தும் நம்மளப்பற்றி ஒரு
வார்த்தை கூட வீட்டுல சொல்லி வைக்கலியேன்னு உங்க மேல
வருத்தப்படக்கூடாதுன்னு தான் அப்படி பேசினேன்!

மனைவியின் சாமர்த்தியம் கண்டு ஆச்சரியமானான் கேசவன்.

Tagged in:

1942
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments