இடி

by sabitha 2010-03-06 18:19:33

அக்கா இந்த லெட்டரை உங்ககிட்ட கொடுக்க
சொல்லி பாபு அங்கிள் கொடுத்து விட்டார்க்கா

லெட்டரை கொண்டு வந்த பத்து வயது சிறுவன்
மல்லிகாவிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

பிரித்தாள், படித்தாள் பாபுவிடம் வந்தாள்

என் அக்காவுக்கு கொடுக்க வேண்டிய லவ்
லெட்டரை என்கிட்ட எதுக்கு கொடுக்க
சொன்னே? சீறினாள்.

உன் அக்காவை பார்த்தா பயமா இருக்கு. உன்கிட்ட
கொடுத்தா நீ கொண்டு போய் சேர்த்து விடுவேன்னு
தான் உன்கிட்ட கொடுக்க சொன்னேன்.

அவள் ரிலாக்ஸ் ஆனாள்

சரி.. சரி… நான் ஒரு லெட்டர் எழுதி தர்றேன்.
உன் தம்பி கிட்ட கொண்டு போய் கொடுக்க
முடியுமா?

நானா? மாட்டேன். அண்ணன் தம்பிக்குள் அது
அநாகரிகமாக போய்டும்.

அது போல் தான் நானும், என் அக்கா வேணும்ன்னா
அவகிட்ட லெட்டரை கொண்டு போய் கொடு. என்கிட்ட
அநாகரிகமாக நடந்துக்காதே… ஸ்டுபிட் ..

இடியை போல் கோபத்தை காட்டி முழங்கினாள் மல்லிகா.

Tagged in:

1831
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments