மாலை
by sabitha[ Edit ] 2010-03-06 18:28:32
தாங்கள் துரத்திய கொலையாளி சுந்தரசாமி. ஒரு மண்டபத்திற்குள்
நுழையவே அதன் வாசலில் வந்த நின்றார்கள் இன்ஸ்பெக்டர்
ராஜசேகரும் கான்ஸ்டபிள் கண்ணாயிரமும்.
மண்படத்திற்கு உள்ளிருந்து வெளியில் வந்த கூட்டத்தினர்
எல்லோரும் கான்ஸ்டபிள் கண்ணாயிரத்துக்கு வணக்கம் கூறினார்கள்.
என்னய்யா இது? உனக்கு மட்டும் வணக்கம் என்பது போல
ராஜசேகர் பார்த்தார்
.மாலை போட்டிருக்கேன் ஸார். இன்னொரு மாலை
போட்டிருப்பவர்களை பார்த்தால் வணக்கம் சொல்லிக்குவோம் என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே. ராஜசேகர் திடீரென்று திரும்பி
வெளியில் போய்க்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களில் ஒருவனை கப்
-பென்று இரும்பு பிடி பிடித்தார்.
அவன் தான் கொலைகாரன் சுந்தரசாமி. கண்ணாயிரம் வியந்து போய்…
எப்படி சார் கரெக்டா பிடிச்சீங்க என்றார். எல்லாம் நீங்க சொன்னதை
வெச்சு தான். மாலை போட்டவங்க மாலை போட்ட மற்றவங்களை
பார்த்தா வணக்கம் சொல்லிக்குவோம்னு சொன்னீங்க. ஆனா உள்ள
போய் சபரிமலை சாமி வேஷம் போட்டுக் கொண்டு வந்தவர்களில்,
உங்களை பார்த்து வணக்கம் சொல்லாம போனது இவன் மட்டும் தான்.
இதை கவனிச்சுட்டுருந்தேன். பிடிச்சுட்டேன் என்றார்.