படம்: சிவப்பதிகாரம் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வர்ணலதா, மாலையம்மா வரிகள்: யுகபாரதி அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன் செப்புக்கல்லு சீரழகன் சின்ன செம்பவள வாயழகன் இப்படியோர் தேரழகன் இல்ல இன்னு சொல்லும் ஊரழகன் அப்பறம்நான் என்ன சொல்ல என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன் சித்திரையில் என்ன வரும்? வெய்யில் சிந்துவதால் வெக்கம் வரும்? நித்திரையில் என்ன வரும்? கெட்ட சொப்பனங்கள் முட்டவரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்? தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் (சித்திரையில்..) பாவிப் பயலால இப்ப நானும் படும் பாடுயென்ன ஆவி பொகபோல தொட்டிடாம இவ போவதென்ன கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற கன்னத்துக்கு பவுடரா முத்தங்கள் பூசுற நுலப்போல சீல - பெத்த தாயப்போல காள யாரப் போல காதல் - சொல்ல யாருமே இல்ல (சித்திரையில்...) கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க கூணி முதுகால செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற....... யாரும் ஏறச்சிடாத - ஒரு ஊத்துப் போல தேங்கி ஆகிப்போச்சு வாரம் - இவ கண்ணுமுழி தூங்கி.... (சித்திரையில்...) |