கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி ?

by Geethalakshmi 2010-03-16 12:04:22

கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி ?


வெகு சுவராஸ்யமாக இருப்பதால் ஜிமெயில் பயன்படுத்தி வருகிற பலரும் Buzz பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். லேட்டஸ்ட் சோஷியல் தளமாக இந்த Buzz முயற்சி பேசப்படுகிறது. உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இது நிச்சயம் மாறப் போகிறது.

இதனைப் பயன்படுத்தத் தொடங்கி, புதிய அனுபவம் பெற்று வரும் உங்களை, அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல கீழ்க்காணும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இதன் மூலம் உங்களுடைய BUZZ களை இன்னும் எளிதாக உங்களால் கையாள முடியும்.

ஜிமெயில் BUZZகள் தனி இடம்

BUZZ இன்பாக்ஸில் இருப்பது, அதன் முக்கியத்துவத்தினைக் குறைக்கிறது. மேலும் ஜிமெயில் இன்பாக்ஸில் மற்ற மெயில்களுடன் ஆதத்த் கலந்திருப்பது, இன்பாக்ஸ் தன்மையையும் மாற்றுகிறது என்று சிலர் கருதுகிறார்கள் . மெயில் மற்றும் BUZZ குணாதிசயங்கள் வெவ்வேறாக இருக்கும் போது, ஏன் இரண்டும் கலந்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜிமெயில் கட்டமைப்பில் தேடிய போது இதற்கு ஒரு வழி கிடைத்தது.

ஜிமெயில் இன்பாக்ஸில் பல பிரிவுகளை உண்டாக்கும் வசதி உள்ளது. இந்த பிரிவுகளை உண்டாக்கி நாம் மெயில்களை அனுப்பியவர்கள் வாரியாக, தன்மை வாரியாகப் பிரித்து வைக்கலாம். இதைப் பார்த்த பின் BUZZ களுக்கென இரண்டு பிரிவுகளை உண்டாக்கலாம் என்று தோன்றியது. ஒன்று நீங்கள் அமைக்கும் BUZZகளுக்காக; மற்றொன்று பிறரிடம் இருந்து கிடைக்கும் BUZZகளுக்காக. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்பாக்ஸ்களை எப்படி அமைப்பது என்றும் அறிந்து கொள்ளலாம்.

1. முதலில் ஜிமெயில் லேப்ஸ் (Gmail Labs) திறந்து கொள்ளுங்கள். வலது மேல் மூலையில் பச்சை நிறத்தில் சிறிய பீக்கர் உருவம் ஒன்று இருக்கிறதா? அதுதான் லேப்ஸ் தரும் உருவமாகும். கிடைக்கும் பிரிவில் Multiple Inboxes என்று இருப்பதனை இயக்கவும். பின் அந்தப் பக்கத்தின் கீழாகச் சென்று "save changes"என்று இருப்பதில் அழுத்தவும்.

2. மீண்டும் இன்பாக்ஸ் (Inbox) வந்து அதில் லேப்ஸ் ஐகானுக்கு அருகே உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு "Multiple Inboxes" என்று இருப்பதைப் பார்க்கலாம்.

3. இதில் "Pane 0" என்று இருப்பதில் is: My Buzzes என டைப் செய்திடவும். பின் "Panel title (optional)" என்று இருக்கும் இடத்தில் "My Buzzes" என டைப் செய்திடவும்.

4.பின் "Pane 1” என்று இருப்பதில் "My Buzzes" என டைப் செய்திடவும். பின் "Panel title (optional)" என்று இருக்கும் இடத்தில் “ஆதத்த்ஞுண்” என டைப் செய்திடவும்.

5. இனி ஒவ்வொரு பாக்ஸிலும் கான்வர்சேஷன் (மெயில் மெசேஜ்) எத்தனை இருக்க வேண்டும் எனத் தரவும். மொத்த இன்பாக்ஸில் இந்த பிரிவு எங்கு இருக்க வேண்டும் என்பதனையும் காட்டவும்.

6. அடுத்து "save changes" என்பதனை அழுத்தவும். இனி உங்களுக்கு வரும் Buzzகள் இன்பாக்ஸின் தனிப்பிரிவில் வருவதனைப் பார்க்கலாம். இவை உங்களுடைய மொத்த பொதுவான இன்பாக்ஸை மறிக்காமல் இருப்பதனையும் காணலாம்.

லேபிள்கள்

ஜிமெயில் இன்பாக்ஸில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் அமைப்பதாக இருந்தால் மட்டுமே இது உங்களுக்குப் பயன்படும். (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் எப்படி அமைப்பது என்பது குறித்து மேலே விளக்கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன).

இங்கு என்ன என்ன லேபிள்கள் உருவாக்க வேண்டும் என்று பார்க்கலாம். My Buzzes மற்றும் Buzzes என இரண்டு லேபிள்கள் உருவாக்கவும். இவற்றை உருவாக்க, உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் மேலாக Labels என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் Manage Labels என்பதைத் தேர்ந்தெடுக் கவும். பின் கீழாகச் சென்று டெக்ஸ்ட் என்டர் செய்வதற்கான பாக்ஸ் ஒன்று Create a New Label என்று இருப்பதைக் காணவும். இங்கு ஒன்றன் பின் ஒன்றாக மேலே சொன்ன இரு லேபிள்களையும் டைப் செய்திடவும். பின் Create என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் இன்பாக்ஸுக்குச் செல்லவும். இனி அடுத்த இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இறங்கலாம்.

ஜிமெயில் இன்பாக்ஸில் Buzz வேண்டாமா? மூன்று வகையான Buzzகள் உங்கள் ஜிமெயில் இன்பாஸ்க்குத் தானாக அனுப்பப்படும். முதலாவதாக, நீங்கள் உருவாக்கிய Buzz கள். இரண்டாவதாக நீங்கள் உருவாக்கிய மெசேஜ் குறித்து இன்னொருவர் கமெண்ட் அமைக்கும் போது. மூன்றாவதாக நீங்கள் கமெண்ட் அமைத்த Buzz மீது இன்னொருவர் கமெண்ட் அமைக்கும் போது அல்லது யாரேனும் ஒருவர் ரிப்ளை சிஸ்டம் மூலம் உங்களை குறித்து இழுக்கும்போது.

கூகுள் இவற்றை எல்லாம் ஏன் உங்களின் இமெயிலுக்கு அனுப்புகிறது என்றால், நீங்கள் உருவாக்கிய அல்லது கலந்து கொண்ட ஆதத்த்கள் குறித்து புதிய செய்திகள் தரப்படும்போது, நீங்கள் அவற்றை அறிய விரும்புவீர்கள் என்று கூகுள் எண்ணுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக உணர்ந்தால், கூகுள் அனுப்பாமல் இருக்க எந்தவித ஆப்ஷனையும் தரவில்லை. நீங்களே ஜிமெயில் பில்டர் அல்லது லேபிள் பயன்படுத்தி இவற்றைத் தள்ளி வைக்கலாம்.

உங்கள் Buzz களை வடிகட்டலாம்

1.உங்களுக்கு வரும் Buzzகளில் எவை உங்களுக்குத் தேவை என, வரும்போதே வடிகட்டி வைக்கும் வசதியை கூகுள் தருகிறது.

2.உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குச் செல்லுங்கள். அந்தப் பக்கத்தின் மேலாக, "Search the Web" பட்டனை அடுத்து Create a Filter என்று ஒரு வரி இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்திடுங்கள்.

3.இதில் "From" பிரிவில் உங்களுடைய பெயரை டைப் செய்திடவும். அடுத்து "Has the words" என்ற பாக்ஸில் "label:buzz" என டைப் செய்திடவும்.

4.அடுத்து "Next step" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஒருவேளை ஒரு எச்சரிக்கை வரலாம். இது வழக்கத்திற்கு மாறானது (unusual step) என்ற செய்தி கிடைக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஓகே கிளிக் செய்திடவும்.

5.இதே பக்கத்தில் Apply the label என்ற ட்ராப் டவுண் மெனுவில் "My Buzzes" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து இத்தகைய BUZZ அறிவிப்புகளை ஜிமெயில் என்ன செய்திட வேண்டும் என நீங்கள் முடிவெடுத்து செயல்படலாம். Skip the inbox Mark as read என்பது போன்ற எதனை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்கலாம். என்னைக் கேட்டால் Skip the inbox தான் இதற்குச் சரி. இவற்றைப் படிக்க வேண்டும் என்றால் ஜிமெயிலின் இடது பக்கம் உள்ள "All mail" என்பதில் கிளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.

6.அடுத்து "Also apply filter to..." என்பதில் செக் செய்திடவும். பின் "Create filter" பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான், உங்கள் வடிகட்டி இனி ஆதத்த் மெயில்களை நீங்கள் குறிப்பிட்டுள்ள வகையில் ஓரம் கட்டி வைக்கும்.

மற்றவர்களின் Buzz களை வடிகட்ட

இந்த இரண்டாவது பில்டருக்கு, ஏற்கனவே மேலே ஐந்தில் முதல் பத்தியில் கூறியுள்ளபடி செய்திடவும். ஆனால் உங்கள் பெயருக்கு முன் ஒரு மைனஸ் (–) அடையாளம் ஏற்படுத்தவும். அடுத்தபடியாக "Buzzes" என்னும் லேபிளை அடையாளம் காட்டவும். பின் ஏற்கனவே காட்டியபடி பில்டர் ஆப்ஷன்ஸ் ஏற்படுத்தவும். அவ்வளவுதான்! உங்கள் விருப்பப்படி "Buzzes" எல்லாம் வகை செய்யப்பட்டு உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் ஒதுங்கி பதுங்கிக் கொள்ளும்.
2025
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments