நகைச்சுவை
by Sanju[ Edit ] 2010-03-17 15:41:15
நகைச்சுவை
சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை
நகைச்சுவை எனலாம். நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு தனித்துவமானது.
நகைச்சுவை மன இறுக்கம் மன உழைச்சல் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும்.
கடி
அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ?
அரசர்: இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்... அதனால் 'விழுப்புண்' என்றேன்.
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
நையாண்டி/பரிகாசம்
இப்புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள்!
இப்புத்தகம் அபாரம் போங்க!
"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டே இருந்த என் வீட்டு மேஜையின் காலின் கீழ் புத்தகத்தை
வைத்தேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது முப்பது வருடமாக ஆ(ட்)டிக் கொண்டிருந்த
பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது. இன்னும் இது மாதிரி பல உபயோகமான புத்தகங்களை எழுதுங்கள்."
-- ராமன், தெனாலி