மீண்டும் டைட்டானிக்: ஜேம்ஸ் கேமரூன் அதிரடி திட்டம்
by GJSenthil[ Edit ] 2010-03-18 14:40:34
லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘அவதார்' முப்பரிமாண படம் வெற்றி அடைந்தததை தொடர்ந்து, தன் முந்தைய சூப்பர் ஹிட் படமான டைட்டானிக்கை, 3D தொழில்நுட்பத்தை பயன் படுத்தி மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்டு கொண்டிருக்கும் படம் ‘அவதார்'.
இதன் அபரிமிதமான வெற்றியைத் தொடர்ந்து, 1997ம் ஆண்டு, தன்னுடைய இயக்கத்திலேயே வெளிவந்து உலக சினிமா ரசிகர்களை உலுக்கிய ‘டைட்டானிக்' படத்தை முப்பரிமாண தொழில்நுட்பத்தை உபயோகித்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக, அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்தப் படம் 2012ம் ஆண்டுதான் வெளிவருமாம். அது என்ன கணக்கு? 2012ம் ஆண்டில்தான், ‘டைட்டானிக்' கப்பல் மூழ்கிய சோக சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.
மீண்டும் டைட்டானிக் படம் எடுக்கப் பட இருப்பது ஹாலிவுட் ரசிகர்களை குஷி அடைய செய்துள்ளது.