ஸ்ரீராம நவமி

by Geethalakshmi 2010-03-24 16:06:50

ஸ்ரீராம நவமி - ஸ்ரீராம் ஜெயராம்




இன்று (Wednesday, March 24, 2010) ஸ்ரீ ராம நவமி. நம் கஷ்டங்கள் குறைய இரு முறை 'ராம, ராம' என்று சொன்னாலே போதும் என்று ஹனுமான் சொன்னதாகச் சொல்வார்கள். இங்கிருக்கும் ஹனுமார் சிலை எங்கு அமைந்துள்ளது என்பது நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும் - அதனால் நாங்கள் சொல்லவில்லை தெரிந்தவர்கள் பின்னூட்டமாய் சொல்லுங்களேன்.

ஸ்ரீ ராம நவமி அன்று எங்கள் ஊர் பெருமாள் கோவிலில் பானகம், நீர் மோர், வடை பருப்பு எல்லாம் தருவார்கள். இதற்கு ஒரு பின்னணி இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம். கோடையில் உண்டாகும் சில நோய்களைக் கட்டுப் படுத்த இம்மாதிரி உணவுகள் பயன்படும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ராம நவமியுடன் நிறுத்தி விடாமல் குழந்தைகளும் பெரியவர்களும், தொடர்ந்து பானகம் மற்றும் நீர் மோர் அருந்துவது கோடையின் கொடுமையிலிருந்து தப்ப உதவும்.
2203
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments