பகத் சிங்கிற்கு டிவிட்டரில் வீர வணக்கம்

by Geethalakshmi 2010-03-24 16:09:48

பகத் சிங்கிற்கு டிவிட்டரில் வீர வணக்கம்




இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந்து விடவில்லை என்பதையும் டிவிட்டர் இப்போது நிருபித்திருக்கிறது.அதானால் தான் தியாகிகள் தினத்தன்று டிவிட்டர் வெளி பகத் சிங் பெயரால் அதிர்ந்திருக்கிற‌து.

குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை பாலிவுட் பிர‌ப‌ல‌ங்க‌ள் முத‌ல் சாமான்ய‌ர்க‌ள் வ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.அவ‌ர‌வ‌ர் த‌ங்க‌ளுக்கு விருப்ப‌மான‌வ‌ற்றை டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளாக‌ வெளியிடுவ‌தோடு அவ‌ப்போது பேச‌ப்ப‌டும் விஷ‌ய‌ங்க‌ள் குறித்தும் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌ டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

ஐபிஎல் போட்டி,நித்தியான‌ந்தா விவ‌கார‌ம், போன்ற‌வை குறித்தெல்லாம் டிவிட்ட‌ர் வெளியில் இந்திய‌ர்க‌ள் போட்டி போட்டிக்கொண்டு க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்கின்ற‌ன‌ர்.

இந்த‌ வ‌கையில் ப‌க‌த் சிங்,சுக் தேவ் ,ராஜ‌குரு வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்த‌தை குறிக்கும் வ‌கையில் அணுச‌ரிக்க‌ப்ப‌டும் தியாகிக‌ள் தின‌மான‌ நேற்று ப‌ல‌ர் டிவிட்ட‌ரில் இந்த‌ வீர‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் செலுத்தும் வ‌கையில் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்துள்ள‌ன‌ர்.

டிவிட்ட‌ரில் எந்த‌ த‌லைப்பு குறித்து அதிக‌ம் க‌ருத்து வெளியிட‌ப்ப‌டுகிற‌தோ அந்த‌ த‌லைப்பு மேலோங்கும் த‌லைப்பாக‌ குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து.நேற்றைய‌ தின‌த்தை பொருத்த‌வ‌ரை ப‌க‌த் சிங் த‌லைப்பு மேலோங்கும் அள‌வுக்கு அதிக‌ ப‌திவுக‌ள் வெளியாயின‌.

ப‌ல‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ள் ப‌க‌த் சிங் மற்றும் அவ‌ர் தோழ‌ர்க‌ள் ப‌ற்றி க‌ருத்து தெரிவித்திருந்த‌ன‌ர்.

ஷாஜு 46 என்னும் டிவிட்ட‌ர் ப‌ய‌னாளி ப‌க‌த்,ராஜ‌குரு,சுக்தேவ் வெற்றி பெற்றிருந்தால் இந்தியா சிற‌ப்பாக‌ இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

சாக்ஷி குமார் என்ப‌வ‌ர் இந்த‌ மூவ‌ரும் தாங்க‌ள் சரியான‌ ந‌ம்பும் விஷ‌ய‌த்திற்காக‌ துணிந்து போராடிய‌ இளைய‌ த‌லைமுறைக்கு உதாராண‌ம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கூடைகாந்த் என்ப‌வ‌ர் ப‌க‌த் சிங் ம‌ற்றும் தோழ‌ர்க‌ளூக்கு வீர‌ வ‌ன‌க்க‌ம் என்று த‌லை வ‌ண‌ங்கியுள்ளார்.

கேடி மேத்தா என‌ப‌வ‌ர் தியாகிக‌ள் தின‌த்தில் ஒரிஜின‌ல் 3 இடிய‌ட்ஸை போற்றுவேம் என்று குறிப்பிட்டூள்ளார்.
ஆன‌ந்த‌ ம‌கிந்திரா என்ப‌வ‌ர் இந்திய‌ விடுத‌லைக்கு வித்திட்ட‌வ‌ர்க‌ள் என்று பாராட்டியுள்ளார்.

இன்னொருவ‌ரோ ப‌க‌த் ப‌ற்றி டிவீட் செய்தால் போதாது அவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌ மாறுங்க‌ள் என்று கூறியுள்ளார்.

( ஐபிஎன் இணைய‌த‌ள‌ம் இது ப‌ற்றி விரிவாக‌ செய்தி வெளியிட்டுள்ள‌து.).
1803
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments