சிறகடிக்கும் நிலவு - சுறா - Siragadikkum Nilavu - Suraa Song Lyrics

by Geethalakshmi 2010-04-01 12:49:46


சிறகடிக்கும் நிலவு - சுறா - Siragadikkum Nilavu - Suraa Song Lyrics


Siragadikkum Nilavu




















சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா



சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி

என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
சில நேரம் யாரைக்கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் காதல் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சும் துயிலாமல் உன் மடியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை

ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்யப் பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான்




பாடல்: சிறகடிக்கும் நிலவு (Siragadikkum Nilavu)
பாடியவர்கள்: கார்த்திக், ரீதா
படம்: சுறா
இசை:மணிசர்மா


Tagged in:

2033
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments