ஏக்கம்
by Sanju[ Edit ] 2010-04-07 15:48:00
ஏக்கம்
அகப்பையில் ஒன்றும்
வராது என்று தெரிந்தும்
காலி பானையை
துலாவும் ஏழை
பசியை விரட்ட
ஈரத்துணியை கட்டிக்கொண்டு
படுப்பது போல்
உன்னிடம் இருந்து மின்னஞ்சல்
வராது என்று தெரிந்தும்
நிதம் என் மின்னஞ்சலை
சரிப் பார்க்கிறேன்
நீ ஒரு மின்னஞ்சல்
அனுப்ப மாட்டாயா
என்ற ஏக்கத்துடன்
ஏமாற்றம் மிஞ்சவே
உன் நினைவை சுமந்து
உறங்கச் செல்கிறேன்
உன் என்னம்
சுமக்கும் உறிமையாவது
மிஞ்சியதே ! எனக்கு !