இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
by Geethalakshmi[ Edit ] 2010-04-13 09:50:05
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
சித்திரைத் திருமகள்
இத்தரை மீதினில்
சுமந்து கொடுத்திட்ட
சுகமான புது வருடம்
தைமகள் மீது அத்தினந்தனை
தலைவர்கள் சுமத்திட
தனக்குள் சிரித்திட்டாள்
தமிழ்மகள் தானே அவளும் என்றே
சட்டங்கள் போட்டே உலகில்
சம்பிரதாயங்களை மாற்றினும்
சித்திரைத் தினமும் இன்னமும்
சிறப்பாய்த் தான் மனதில் தெரியுது
புதுவருடம் என்றே எண்ணாவிடினும்
புதிய சித்திரை என்றே அவளுக்கு
புதுவசந்தத்தைத் தாங்கி வருவதனாலே
புன்னகையுடன் வாழ்த்துக்கள் கூறுவோம்
அன்புடன் தோட்டத்து அன்பு மலர்களே
அன்புடன் நான் வாழ்த்தி நிற்கிறேன்
அகிலமெல்லாம் அமைதி பூத்திட
சித்திரையாவது சிறிது உதவட்டும்
அன்பான சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்
அன்புடன்,
கீதா