விரும்பியவரை மணந்தேன் - சானியா மிர்சா

by Geethalakshmi 2010-04-18 10:47:12

விரும்பியவரை மணந்தேன் - சானியா மிர்சா



ஐதராபாத் : ‘‘எனது கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை’’ என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறினார்.

சானியா மிர்சா & பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்த சானியா கூறியதாவது:

எனது கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அதை சிலர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். அவர் பாகிஸ்தானியர் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை. நான் விரும்பிய மனிதரை மணந்துள்ளேன். மற்ற எல்லோரையும் போல் நாங்களும் திருமணம் செய்து கொண்டுள்ளோம்; அவ்வளவுதான். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த திருமணம் நல்லபடியாக நடந்துள்ளதால் இப்போது நிம்மதியாக இருக்கிறோம்.

Tagged in:

1575
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments