பாலைத்திணை
by Geethalakshmi[ Edit ] 2010-04-29 22:06:36
பாலைத்திணை
பாலைத்திணை: பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும். இதனால், காதலர் இடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.
பாலையின் கருப்பொருட்கள்:
கடவுள்: கொற்றவை (துர்க்கை)
மக்கள்: விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள்: புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு: செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
ஊர்: குறும்பு
நீர்: நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
பூ: குரா, மரா, பாதிரி
மரம்: உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு: வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
பறை: துடி
யாழ்: பாலை யாழ்
பண்: பாலைப்பண்
தொழில்: போர் செய்தல், வழிப்பறி
பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது"