மருதத்திணை

by Geethalakshmi 2010-04-29 22:07:36

மருதத்திணை


மருதத்திணை: மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.

மருதத்தின் கருப்பொருட்கள்:

கடவுள்: வேந்தன் (இந்திரன்)

மக்கள்: ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

புள்: வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.

விலங்கு: எருமை, நீர்நாய்

ஊர்: பேரூர், மூதூர்

நீர்:ஆற்று நீர், கிணற்று நீர்

பூ: தாமரை, கழுனீர்

மரம்: காஞ்சி, வஞ்சி, மருதம்

உணவு: செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி

பறை: நெல்லரிகிணை, மணமுழவு

யாழ்: மருத யாழ்

பண்: மருதப்பண்

தொழில்: விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்

மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது"
1637
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments