நெய்தல்திணை

by Geethalakshmi 2010-04-29 22:08:14

நெய்தல்திணை


நெய்தல்திணை: கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.

நெய்தலின் கருப்பொருட்கள்:

கடவுள்: வருணன்

மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

புள்: கடற்காகம், அன்னம், அன்றில்

விலங்கு: சுறா, உமண் பகடு

ஊர்: பாக்கம், பட்டினம்

நீர்:உவர்நீர் கேணி, மணற்கேணி

பூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்

மரம்: கண்டல், புன்னை, ஞாழல்

உணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை

பறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை

யாழ்: விளரி யாழ்

பண்: செவ்வ்வழிப்பண்

தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்

நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது"

இக்கருப்பொருட்கள் அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருட்கள் என்றே கருத வேண்டும். இவையன்றி பிறவும் உள்ளன என்பதும் அவையும் இலக்கியங்களில் பயின்று வருதலும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
1642
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments