பிள்ளைத்தமிழ்
by Geethalakshmi[ Edit ] 2010-04-29 22:18:27
பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ் தமிழில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.