சப்பாணிப்பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்

by Geethalakshmi 2010-04-29 22:24:01

சப்பாணிப்பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்


ஒரு பழத்திற்கா உலகைச் சுற்றி நீ

வருகையில் உன் தமையன் -- யானை

உருக் கொண்ட முதல்வன் தாய் தந்தையரை

ஒருமுறை வலம்வந்து வாங்கிக்கொள்ள - (கோபமே)

உருவாகி குன்றில் குடிபுகுந்த குமரா!

சப்பாணி கொட்டியருளே!

அருளுவதில் அடியார்க்கும் அடியவனே

தொண்டாற்றும் தலைவா!

மருவில்லாத் திருவே! மாணிக்க வேலவனே

சப்பாணி கொட்டியருளே!
1596
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments