பறவைகள்- சில தகவல்கள்
by Geethalakshmi[ Edit ] 2010-04-29 23:27:05
பறவைகள்- சில தகவல்கள்
ரோடுரன்னர் என்ற பறவை 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.ஆனால் இது பறக்காது.
நீரிலும் நிலத்திலும் வாழும் பறவை பென்குயின்.
கிளிகள் 54 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
புறாக்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
ரென் என்ற பறவை தன் குஞ்சுகளுக்கு ஒரு நாளில் 1,271 முறை உணவு ஊட்டிவிடுமாம்.
சில்லிமட் எனும் ஆர்க்டிக் பிரதேச கடல் பறவையில் ஆண் இனம்தான் முடடையிடும்.
கோல்டன் கழுகு வெவ்வேறு இடங்களiல் இரண்டு கூடுகள் கட்டி வைத்துக் கொண்டு, ஆண்டுக்கொருமுறை கூட்டை மாற்றிக் கொள்ளுமாம்.
கிவி என்ற பறவைக்கு இறகுகளுமில்லை. அதனால் பறக்கவும் முடியாது.
ஹம்மிங் பறவையால் மட்டுமே பின்னோக்கிப் பறக்க முடியும். இப்பறவைகளுக்கு பற்கள் கிடையாது. இப்பறவையால் நடக்கவும் இயலாது.
பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை அன்னப் பறவைதான்.
மார்ஷ் வார்ப்னர் என்ற பறவை மற்ற பறவைகளைப் போல் குரலை மாற்றி ஒலி எழுப்பும் திறன் படைத்தது.
டெரின் எனும் பறவை எட்டு மாதங்கள் வரை தொடர்ந்து நிற்காமல் பறக்கும் திறனுடையவை.
பறவைகள் எவ்வளவு பறந்தாலும் அதற்கு வியர்க்காது. ஏனென்றால் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
பூங்கொத்திப் பறவைகளின் எடை ஐந்து கிராம் மட்டுமே.
ஆண்டியன் காண்டார் என்ற கழுகு வகைதான் பறவை இனங்களிலேயே அதிக ஆண்டு உயிர் வாழக்கூடியது.
ஸ்பின் வால் ஸ்விப்ட் எனும் பறவை மணிக்கு 171 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.