ஜப்பான்...ஜப்பான்...
by Geethalakshmi[ Edit ] 2010-04-29 23:28:47
ஜப்பான்...ஜப்பான்...
ஜப்பானியர்களின் மதம் ஷிண்டோ
கத்திமுனை அறிவுடைய மனிதன் என்கிறப் புனைப்பெயர் பெற்றவர் ஜப்பானியப் பிரதமராயிருந்த ஜெனரல் ஹிடேக்கி டோஜா.
ஜப்பானின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது ஒசாகா.
உலகிலேயே பூமி அதிர்ச்சி அதிகம் ஏற்படும் நாடு ஜப்பான்தான்.
புண்ணியத்தலமாகப் போற்றப்படும் எரிமலை ஜப்பானிலுள்ள ஃபூஜியா மலைதான்.
முதன்முதலாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்தான்.
ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்-யென்.
ஜப்பான் டைப்ரட்டரில் 2863 எழுத்துக்கள் இருக்கும்.
ஜப்பான் நாட்டில்தான் புல்லட் ரயில்கள் ஓடுகின்றன.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் பெயர் டயட்.
விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு ஜப்பான்தான்.
உதயசூரியன் பூமி என்று அழைக்கப்படும் நாடு ஜப்பான்.
உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஜப்பானின் யோக்கஹாமாவில் உள்ள ஸ்டீல்டவர்தான்