தற்கொலை செய்து கொள்ளும் விலங்கு
by Geethalakshmi[ Edit ] 2010-04-29 23:30:51
தற்கொலை செய்து கொள்ளும் விலங்கு
இரவுநேரப் பிணம் தின்னி உயிரினமான ரக்கூன் உணவைக் கழுவிச் சாப்பிடும் குணமுடையது.
ஆஸ்ட்ரிச் எனும் பறவை ஒரே கூட்டில் 100 முட்டைகள் வரை இடும்.
அப்போசம் எனும் விலங்கு எதிரிகள் பயமுறுத்தினால் மயக்கமடைந்து விடும்.
லெம்மிங் எனும் விலங்கு ஸ்காண்டிநேவியாவைக் கடந்து சென்று கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும்.
கார்டஸ் என்கிற மலர் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும்.
தாய்லாந்து நாட்டில்தான் வெள்ளை யானைகள் காணப்படுகிறது.
பூஜ்யத்தைக் கண்டுபிடித்த நாடு இந்தியா.
ஜேன் கிரே என்பவர் இங்கிலாந்தின் ராணியாக ஒன்பது நாட்கள் மட்டும் இருந்தார்.
பூரானுக்கு 100 கால்கள் வரை இருக்கும்.
குவைத் நாட்டில் வருமான வரி கிடையாது.
போலந்து நாட்டில் இரண்டு பள்ளிக்கூடங்களுக்கு இந்திராகாந்தியின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
ஏரியஸ் என்ற மீன் முட்டைகளை வாய்க்குள் வைத்துச் சுமக்கக்கூடியது.
கங்காரு ஒரே குதிப்பில் முப்பது அடி தூரத்தைக் கடந்து விடுமாம்.