பெயரை அடமானம் வைக்கலாம்

by Geethalakshmi 2010-04-29 23:34:22

பெயரை அடமானம் வைக்கலாம்




பாரதியார் நூல்கள் ரஷ்யாவில் மட்டும் 74 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. ரஷ்யாவில் பாரதியாரைத் தெரியாதவர்கள் மிகக் குறைவு.


பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த "கவாக்யு" என்ற பூர்வீகக் குடிகள் தங்களுக்குப் பணம் கடனாகத் தேவைப்படும் போது தங்களது பெயரை அடமானம் வைக்கிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரை கடன் வாங்கியவர் பெயரற்றவராக இருப்பார்களாம்.


தமிழ்நாட்டின் நெய்வேலி நகரில் கடுகுத் தெரு, மிளகாய்த் தெரு, வாழைக்காய்த் தெரு, கத்தரிக்காய்த் தெரு என்றெல்லாம் தெருக்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.


உலகில் மிகக்குறைவான எழுத்துக்களை உடைய ஹவாய் எனும் மொழியில் பன்னிரண்டு எழுத்துக்கள் மட்டும்தான் இருக்கிறதாம்.


மகாத்மா காந்தியடிகள் நடத்திய "யங் இந்தியா" எனும் பத்திரிகையில் கடைசி வரை ஒரு விளம்பரம் கூட இடம் பெறவில்லை.


தாய்லாந்து நாட்டில் தித்திக்கும் புளியம்பழங்கள் கிடைக்கிறது.


உலகில் மிக நீளமான காதல் கடிதம் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளதி. முதலாம் எலிசபத் ராணியின் அரண்மனையைச் சேர்ந்த சேவகர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு எழுதிய இந்தக்கடிதம் 400 பக்கங்கள் கொண்டதாம்.


இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 826 மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது.


ஒரு லிட்டர் யூகலிப்டஸ் எண்ணெய் எடுக்க 16 கிலோ இலைகள் தேவைப்படுகிறது.


ஒரு மனிதன் 72 ஆண்டுகள் வாழ்ந்தால் அவனது முழு வாழ்க்கையிலும் அவனது இருதயம் மூன்றாயிரம் மில்லியன் தடவைக்கு மேல் துடித்திருக்குமாம்.


ஒரு எஸ்கிமோ பெண் தலை முடியை சிகப்பு ரிப்பனால் கட்டியிருந்தால் அவள் கன்னிப்பெண். நீல ரிப்பனால் கட்டியிருந்தால் அவள் மணமானவள்.


இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை 76 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


1939-ஆம் வருடக் கணக்கெடுப்பின்படி தமிழ் மொழியில் 1, 17,762 சொற்கள் உள்ளன.


இந்தியாவில் பெரியவர்களை ஸ்ரீ ல ஸ்ரீ என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு அர்த்தம் லட்சம் முறை ஸ்ரீ என்று எழுதுவதற்குச் சமமானது என்கிறார்கள்.
1921
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments