சந்திரனுக்குக் கார் பயணம்
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 21:51:56
சந்திரனுக்குக் கார் பயணம்
சந்திரனுக்குக் கார் மூலம் போக முடியுமா? முடியாது என்று வேகமாகச் சொல்லி விடுவீர்கள். அப்படிப் போக முடியும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? பூமியிலிருந்து சந்திரன் 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் போனால் சந்திரனை அடைய சுமார் ஆறு மாத காலம் ஆகும். மிக் வேகமாகச் செல்லும் ஜெட் விமானத்தில் போனால் 15 நாட்கள் பிடிக்கும். 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் ராக்கெட்டில் போனால் காலையில் கிளம்பி இரவிற்குள் சந்திரனுக்குப் போய் விடலாம்.