பூக்கள் குறித்த சில தகவல்கள்

by Geethalakshmi 2010-04-30 21:53:14

பூக்கள் குறித்த சில தகவல்கள்


பூக்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான "ஃபிளவர்ஸ்" க்கு "எந்தப் பொருளிலும் சிறந்தது" என்று கூறுகிறது வெப்ஸ்டர் எனும் ஆங்கில அகராதி.


இறைவனை பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபாடு செய்வதை பூ+செய் என்றார்கள். அதுவே பூஜை என்று மருவி விட்டது.


கிறித்துவர்களின் வேத நூலான பைபிளில் லில்லி எனும் மலர் பல இடங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.


இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனில் எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.


இறைவனின் வழிபாட்டுக்குரிய பூக்களை எடுத்து நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக "கழற்சிங்கன்" எனும் அரசன் தனது பட்டத்து ராணியின் மூக்கையும் கையையும் வெட்டி எறிந்து விட்டான்.


எறிபத்த நாயனார் எனும் சிவனடியார் "இறைவனுக்குச் சூட வேண்டிய மலரின் தூய்மை மாசுபட்டு விடும்" என்று கருதி தனது வாயைத் துணியால் கட்டிக் கொண்டுதான் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பாராம்.


காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித மலர்களுக்கு மணம் கிடையாதாம்.


பூசனிச் செடியில் காய்க்கும் பூ, காய்க்காத பூ என்று இரு வகையான பூக்கள் பூக்கின்றன.


மிக உயர்ந்த பூக்காத தாவரம் ஃபெர்ன் மரம்தான்.


காந்தள் மலர்தான் கார்த்திகைப்பூ என்று அழைக்கப்படுகிறது.


பன்னீர்ப்பூக்கள் இரவில்தான் மலர்கின்றன.


குறிஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கின்றன.


பாதிரி என்கிற மலர் நடுப்பகலில் மலரக் கூடியது.
1930
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments