உலக மக்களின் தண்ணீர் பயன்பாடு

by Geethalakshmi 2010-04-30 21:58:39

உலக மக்களின் தண்ணீர் பயன்பாடு


பகவான் புத்தர் அவதரித்தது, போதிமரத்தடியில் ஞானம் பெற்றது, புத்தர் இந்த உலகை விட்டு மறைந்தது இம்மூன்றும் வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில்தான்.


உலகிலேயே மிகவும் உயரமுடைய பழங்குடியினர் ருவாண்டா நாட்டில் வசிக்கும் வாட்டுஸி எனும் பழங்குடி மக்கள்தான். இவர்களில் ஆண்கள் சராசரியாக ஆறு அடி ஐந்து அங்குலம் வரையிலும், பெண்கள் சராசரியாக ஐந்து அடி பத்து அங்குலம் வரையிலும் உயரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.


உலகிலுள்ள மொத்த எரிமலைகளில் சரிபாதி எரிமலைகள் இன்னும் பொங்கி எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எரிமலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலின் கரைகளைச் சுற்றியேதான் அமைந்துள்ளன.


கரையான்கள் துணிகளையோ, புத்தகங்களையோ நேரிடையாக அரிப்பதில்லை. அங்கு சென்றதும் அவை முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் புது ஜீவன்கள்தான் சேதம் செய்கின்றன.


ஆண்டுதோறும் மழை மூலமும், பனி மூலமும் 97,000 கன் கிலோ லிட்டர் நல்ல தண்ணீர் பூமிக்குக் கிடைக்கிறது. இதில் 1.5 சதவிதம் தண்ணீர்தான் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.


அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் மிக வேகமாகச் சென்று கலக்கிறது. இந்த வேகத்தால் அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூற்றிருபது கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும் நீர் நல்ல நீராகவே இருக்கிறது.


மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.


பிரான்ஸ் நாட்டில் 24 மணி நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.


அச்சடிக்கப்பட்ட முதல் வங்கிக் காசோலை 1763-ஆம் ஆண்டு லண்டனில்தான் அறிமுகமானது. அங்கேயிருந்த ஹோர்சஸ் வங்கிதான் இந்தக் காசோலை முறையை அறிமுகம் செய்தது.


ஆசியாவின் மிகச் சிறிய நாடான மாலத்தீவில் இரண்டாயிரம் சிறிய பவளத்தீவுகள் உள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
1757
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments