சீர்காழி கோவிந்தராஜனுக்குக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும்

by Geethalakshmi 2010-04-30 22:06:04

சீர்காழி கோவிந்தராஜனுக்குக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும்


தமிழ்த் திரை இசை, ஆன்மீகப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் இன்னிசைப் பாடல்களுக்காக தமிழ்நாட்டிலும் , உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல பட்டங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

இசை மணி: சென்னை, தமிழ் இசைக் கல்லூரி வழங்கிய பட்டம். (1949)


சங்கீத வித்வான்: சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரி வழங்கிய பட்டம் (1951)


இசை அரசு: காரைக்குடி குன்றக்குடி ஆதீனம் (1971)


சிறந்த திரைப்படப் பாடகர்: தமிழக அரசு (1972)


இசைக்கடல்: சென்னை, பாரதி இளைஞர் மன்றம் (1972)


இன்னிசை அரசு: சென்னை, தமிழ்நாடு நல்வழி நிலையம் (1974)


தருமபுர ஆதீன இசைப்புலவர்: தருமபுர ஆதீனம் (1974)


கலைமாமணி: தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் (1975)


இன்னிசை வேந்தன்: சென்னை, கந்தன் கலை அகாடமி (1976)


சங்கீத பாஸ்கரா: புதுக்கோட்டை, ஸ்ரீ புவனேஸ்வரி ஆதிஸ்தானம், ஸ்ரீ சந்தானந்த சுவாமி (1977)


இசை திலகம்: ஸ்ரீ தியாகராஜா சங்கீத சபா (1977)


இசைஞான பூபதி: லண்டன், பிரிட்டானியா இந்து சிவன் கோவில் அறக்கட்டளை (197Cool


ஏழிசை வேந்தர் & கானாமிருத வரிதி: இலங்கை (197Cool


பேரிசைமணி: மலேசியா, கோலாலம்பூர். சங்கீத அபிவிருத்தி சபா (1979)


இறை இசை வேந்தை: ஈரோடு, சேசசாயி காகித ஆலை கோவில் (1979)


மியான் டான்சன் விருது: புதுடெல்லி, டெல்லி துருபத் சங்கம் (1980)


சங்கீத அகாதமி விருது: மத்திய சங்கீத நாடக அகாதமி (1980)


தமிழிசை மன்னர்: அமெரிக்கா, நியூயார்க் தமிழ் சங்கம் (1981)


காந்தர்வ கீதா வித்தகர்: பிரான்ஸ், பாரிஸ், ராமலிங்கர் பணி மன்றம்.(1981)


டி சிங்கெண்டன் ஹெர்சன் வான் இண்டியன் விருது: மேற்கு ஜெர்மனி, யோகா மையம்(ஜெர்மன்) (1981)


தமிழ்நாடு அரசவைக் கலைஞர்: பாரதியார் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் (1981)


இசைப் பேரறிஞர்: சென்னை, தமிழ் இசைச் சங்கத்தின் வருடாந்திர இசை விழா கவுரவம் (1982)


பத்மஸ்ரீ: மத்திய அரசு விருது (1983)


இசைத் தென்றல்: திருத்தணி, தியாகராஜ சுவாமி ஆராதனைக் குழு (1984)


இன்னிசை மணி: குரு ஞான சம்பந்தர் இறைப்பணி மன்றம் (1985)


கம்பீர கான இசை வேந்தன்: மதுரை, ஆர்ய வைஸ்ய பள்ளிகள்(1985)


அருள் இசை அறிஞர்: மொரிசியல் கல்வி & கழகச் சுற்றுலா (1987)


தமிழ் இசைப் பேரறிஞர்: பெங்களூர், தமிழ்ச் சங்கம் (1987)


முத்தமிழ்க் கலை மாமணி: சேலம், தமிழ்ச் சங்கம் (1987)


இசை மாமன்னர்: திராவிடர் கழகம் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழா (1987)


இசைப்பேரருவி: பிரான்சு, பாரிஸ், சித்தி விநாயகர் கோவில்.


கலாச்சாரத் தூதர்: சுவிட்சர்லாந்து, உலக அமைதிக்குழு மாநாடு.

1846
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments