நிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம்

by Geethalakshmi 2009-09-01 11:24:24

நிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம்




நிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம்

பல்லவி

ஆ: நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

தேவதை அன்னம் பட்டாம் பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

சரணம்

பெ: அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒலியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா

அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட


ஆ: நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

பெ: அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

Tagged in:

4729
like
3
dislike
1
mail
flag

You must LOGIN to add comments