Iruvar - kavithai (unnodu naan irundha)

by Sanju 2009-09-10 20:44:11

இருவர் - கவிதை (உன்னோடு நான் இருந்த)




உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயதோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே (2)



Tagged in:

3108
like
1
dislike
1
mail
flag

You must LOGIN to add comments