பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி

by Geethalakshmi 2010-05-15 18:53:49

பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி


தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இரசாயன பொருட்கள் - ஹீலியம், பாதரசம், ஓசோன், ஆசிட்

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு முதல் இடம். நான்கு கவிதைகள் படித்தால் ஒன்றிலாவது வியர்வை வந்துவிடும்.

தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பூ - ரோஜா. சரக்கொன்றை இரண்டாம் இடம்.

தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பறவை - குருவி. செங்குருவி, கரிச்சாங்குருவி, சாவுக்குருவி, குட்டிக்குருவி, சுடலைக்குருவி என்று பல்வேறு வகை குருவிகளாக வரும்.குருவிக்கு அடுத்தபடியாக குயில் அடிக்கடி வந்து போகும். ஆங்கில தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பறவைகள் பீனிக்ஸ், பெங்குவின்.

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த கருத்துகள் - பரிணாமம், தவம், கர்ப்பம், மரணம்

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒற்றை எழுத்து - ஓ.

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த விவசாயக் கருவிகள் - ஏர், சால், கலப்பை,

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த (ஐம்)பூதங்கள் - வானம், தீ, காற்று , வெய்யில் காலத்திலும் பச்சையாக இருக்கும் பச்சைப் புல்வெளி

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த செடி கொடி மர பாகங்கள் - வேர், விதை, முள்.

வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள்

காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள் ?

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த அறை - கருவறை, கல்லறை

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த நீர் - கண்ணீர்

இன்னும் சில ஆங்கில வார்த்தைகள் -

நானொச்செகன்ட்,மைக்ரோசெகன்ட், டெசிபெல், அக்யூபன்க்சர், லாவா, ஜீன்ஸ் பான்ட், கார்ட்டூன், ஏ சர்டிபிகேட், பிக் பாங்க்,கஸ்ட்யூம்,

பபிள் கம், சிரிஞ்ச், நியூட்றன், பாரசூட், ஸ்கிஸொப்ரீனியா, நியூற்றினோ, ஹேலுசினேஷன் இன்னும் நிறைய...

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த காடுகள் - கள்ளிக்காடு, முட்காடு, சுடுகாடு

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஓசைகள் - கிறீச், கிச்சு கிச்சு, கிசுகிசு

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த துணி - கைக்குட்டை

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பூச்சிகள் - பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வள்ளுவப்பூச்சி

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஆங்கில கவிஞர்கள் - இரண்டே பேர் தான். ஷெல்லி, கீட்ஸ்.

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒளி - வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டு அல்லது இருட்டிலிருந்த்து வந்த வெளிச்சம்

எழுத மறந்த கவிதை - லெக்சஸ் தூங்கி - கவிதை எழுத ஆரம்பித்ததும் கவிஞர் தூங்கி விட்டார்.

'துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட் '.

இந்த ஹைக்கூவிற்கு பொழிப்புரை எழுதுபவற்கு ஆயிரம் பொன் பரிசு.
2419
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments