இரண்டாம் உலகப்போர்
by Geethalakshmi[ Edit ] 2010-05-29 20:01:22
இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) என அறியப்படுகிறது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல், போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்.
இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா சின்னப் பையன்(little boy), கொழுத்த மனிதன்(fat man) என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது.
நாள் - செப்டம்பர் 1, 1939 – செப்டம்பர் 2, 1945
இடம் - ஐரோப்பா, பசிபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்தியதரைக்கடல், ஆபிரிக்கா
முடிவு - நேச நாடுகள் வெற்றி. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம். ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் உலக வல்லரசுகளாக வளர்ச்சி.ஐரோப்பாவின் பனிப் போருக்கான ஏதுநிலைகள் உருவாயின.