பனிப்போர்

by Geethalakshmi 2010-05-29 20:01:54

பனிப்போர்


பனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்ச்சி செய்துள்ளன. வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து இரண்டு நாடுகளும் உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகள் பொதுவுடமையை பயன்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசு பொதுவுடமையின் விரிவை தடை செய்ய பார்த்தது. இதனால் கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்காவுடன் இணைந்த படையினர்களும் சோவியத் ஒன்றியத்தை இணைந்த படையினர்களும் போர்களில் ஈடுபட்டுள்ளன.

1980களின் இறுதியில் பனிப்போரின் முடிவு வந்தது. அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்து எதிரான கொள்கைகளின் வலிமையை மேம்படுத்தியுள்ளார். சோவியத் தலைவர் மிகேல் கோர்பசோவ் சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடமை கொள்கைகளை மாற்றினார். 1991இல் சோவியத் ஒன்றியம் அழிக்கப்பட்டு பனிப்போர் முடிவடைந்தது.
1683
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments