வியட்நாம் போர்

by Geethalakshmi 2010-05-29 20:02:24

வியட்நாம் போர்


வியட்நாம் போர் (Vietnam War), அல்லது இரண்டாவது இந்தோசீனப் போர் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975 வரை இடம்பெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுளை வியட்நாம் பிரச்சினை (Vietnam Conflict) என்று குறிப்பிடுவர். இப்போரானது வியட்நாம் சனநாயகக் குடியரசு (வட வியட்நாம்) க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாமின் முழு வெற்றியுடன் இப்போர் முடிவடைந்தது. முடிவில் தென் வியட்நாம் கலைக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. வியட்நாம் ஒன்றுபட்டது.

மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். ஏப்ரல் 30, 1975 இல், தென் வியட்நாமின் தலைநகரம் சாய்கோன் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.
1764
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments