என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க (என்ன தவம்) ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில் ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ (என்ன தவம்) பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ (என்ன தவம்) சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை புனித மாதே எளிதில் பெற - நீ (என்ன தவம்) |