நீ காதலிக்கும் பொண்ணு............!

by Geethalakshmi 2010-05-30 00:41:33

நீ காதலிக்கும் பொண்ணு............!

நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படிவிடு...
அவள் உன்னிடம் திரும்பி வந்தால் அவள் உன்னுடையவள்...
அவள் வராவிட்டால் அவள் எப்போதும் உன்னுடையவளாக இருந்ததில்லை...

இது ஒரு பழைய பொன்மொழி.... இதை ஒவ்வொருவரும் எவ்வளவு வித்தியாசமாக யோசிக்கிறார்கள் என்று பார்க்கலாம்...

புதிய வகைகள்...

உகமையர் (optimist) -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தல் அவளை அவளெண்ணப்படி விடு,
கவலைப்படாதே, அவள் திரும்பி வருவாள்...

படுகையர் (pessimist) -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் எப்போதாவது திரும்ப வந்தால் அவள் உன்னுடையவள்,
அவள் வராவிட்டால், எதிர்பார்த்தது போலவே, அவள் உன்னுடையவள் அல்ல...

சந்தேகக்காரன் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் எப்போதாவது திரும்ப வந்தால் ஏன் வந்தாய் என்று கேள்...

பொறுமையற்றவன் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப வராவிட்டால் அவளை மறந்துவிடு.

பொறுமைக்காரன் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் மீண்டும் திரும்பி வராவிட்டால், அவள் வரும்வரை தொடர்ந்து காத்திரு...

விளையாட்டுத்தனமுள்ளவன் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் திரும்ப வந்தால், அப்போதும் நீ அவளைக் காதலித்துக் கொண்டிருந்தால், அவளை திரும்ப போக விடு.... றிப்பீற்றேய்.............

Blue-cross இல் வேலை செய்பவர் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
ஏனென்றால் உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தாங்கள் விரும்பியபடி சுதந்திரமாக உலாவ உரிமை கொண்டவை.

வழக்கறிஞர் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
ஏனென்றால் திருமணச் சட்டத்தின் 3ம் பிரிவின் 4ம் சரத்தின் கடைசிக்கு முதல் பந்தி அதைத் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.

பில்கேட்ஸ் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் திரும்பி வந்தால் மீள சேர்ப்பதற்கான (re-installation) பணத்தை பெறலாம், அத்தோடு விரும்பினால் அவளை upgrade உம் செய்யலாம்.

தரவியலாளர் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் உன்னை விரும்பினால் அவள் திரும்ப வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
திரும்ப வாராவிட்டால் உனது உறவு பொருத்தமற்றது.

அதிக தன்னுடைமை வாதி (over possessive) -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடாதே....

விஜயகாந் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அப்படிப் போறவங்களில் திரும்பி வந்தது 4 கோடியே 38 லட்சத்து 490 பேரு, அதில 2 கோடியே 8 லட்சத்து 590 பேர் திரும்ப ஓடீற்றாங்க...

அப்பிடி ஓடிப்போன 2 கோடியே 8 லட்சத்து 590 பேரில 50 லட்சத்து 56 ஆயிரத்து 590 பேர் திரும்ப வந்தாங்க...
ஆகவே பாகிஸ்தான் தீவிரவாதிகளின்ர அச்சுறுத்தல் இல்லாதவரைக்கும் அவள சுதந்திரமா விடு....

ரஜினிகாந் -
கண்ணா! நீ ஒருத்தியக் காதலிச்சு அவள அவளெண்ணப்படி விடு, கண்ணா! அவள் திரும்ப வந்தா அவள் உனக்கு உனக்கு சொந்தமானவள்.

அவள் திரும்ப வராட்டி அவள் பொம்ம்ம்பிளையே இல்ல. ஏன்னா பொம்பிளைண்ணா அடக்கம் அடக்கம் வேணும்....
இதெப்பிடி இருக்கு.... ஹா ஹா ஹா.....!

கன்கொன் -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
விட்டுவிட்டு தப்பியோடி நலமாக இரு. ;)
3078
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments