திண்டுக்கல் மாவட்டம்

by Vinoth 2009-11-09 21:48:56

திண்டுக்கல் மாவட்டம்:


திண்டுக்கல் கோட்டை:
பல சுவையான வரலாறுகள் கோட்டையைப் பற்றிக் கூறப்படுகன்றன. கி.பி 1605 ல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கர் கட்டத் தொடங்கினார். அதன்பின் திருமலை நாயக்கர் பணிகளைத் தொடங்கி கி.பி. 1659 இல் நிறைவு செய்தார். 1755 இல் ஹைதர் அலி தன் காதல் மனைவி பகருன்னிசாவையும் ஐந்து வயது மகன் திப்புவையும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் இங்குதான் மறைத்து வைத்தார். திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு இந்தக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கோட்டையின் மதில்களை சீரமைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில் 1790 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயப் படைகளின் கைகளில் வந்தது.திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான். இது 1799 ஆம் ஆண்டு முதல் 1947 வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.மாவீரன் பூலித்தேவன் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பிக்க இந்தக் கோட்டைக்குள் சென்றார். அதன்பிறகு பூலித்தேவனை யாரும் பார்க்கவில்லை என்றும் ஒரு வரலாறு உள்ளது. வரலாறைப் போலவே கோட்டையும் மிகவும் வசீகரமானது. யாவரும் காணவும். !

திண்டுக்கல் பாண்டிய நாட்டை சேர்ந்தது.1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை குறிப்பிடத்தக்க ஒன்று

எல்லைகள்

வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை மாவட்டமும், தென்கிழக்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் கோயம்புத்தூர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் ஏழு வட்டங்களாக பிரிக்கப்பட்டது அவை பின்வருமாறு
* திண்டுக்கல்
* பழனி
* கோடைக்கானல்
* ஒட்டன்சத்திரம்
* வேடசந்தூர்
* நத்தம்
* நிலக்கோட்டை
1982
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments