தொன்மகாலம் | சங்ககாலம் - கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்

by Geethalakshmi 2009-11-10 01:20:55

தொன்மகாலம் | சங்ககாலம் - கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள

தொன்மகாலம்

* அகத்தியர்

சங்ககாலம்

* தொல்காப்பியர்
* ஔவையார்
* புறநானூற்றுப் புலவர்கள்
* சங்கத் தமிழ் பெண் புலவர்கள்
* கணியன் பூங்குன்றனார்
* நக்கீரன்
* சங்கக் காலப் புலவர்கள் கி.மு 200-கி.பி 100- மொத்தம் 473 புலவர்கள் (102 பேர் பெயர் தெரியாதவர்கள்) சிலர் பெண்கள்
* இளவேட்டனார்
* அரிசில் கிழார்
* குறுங்கோழியூர்க் கிழார்
* பூதந்தேவனார்
* பிசிராந்தையார்

கிமு 31

* திருவள்ளுவர்

0
100

* பரணர்

200

* கபிலர்

300

* மாறன் பொறையனார் - ஐந்திணை ஐம்பது எழுதியவர்

400

* இளங்கோ
* சீத்தலை சாத்தனார்
* புத்ததத்தர் - விநயவிச்சயம் எழுதியவர்

500

* காரைக்கால் அம்மையார்
* திருமூலர் - திருமந்திரம் எழுதியவர் (காலம்: ஆக பிந்திய கணிப்பு)

600

* காக்கை பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம்
* திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
* திருநாவுக்கரசு நாயனார்
* ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

700

* சுந்தரமூர்த்தி நாயனார் - திருத்தொண்டர் புராணம்
* திவாகர முனிவர்
* ஆதிசங்கரர் - விவேக சூடாமணி

800

* ஆண்டாள்
* மாணிக்கவாசகர்
* திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணி என்ற விருத்தத்தை இயற்றியவர்.
* அவிநாயனார் - அவிநயம், பன்னிருபடலம், நாலடிநாற்பது, அவிநாயனார் யாப்பு, அவிநாயனார் காலவியல்
* நம்மாழ்வார்
* திவாகரர் - ஆதி நிகண்டு எனப்படும் திவாகர நிகண்டு செய்தவர்.

900

* அமிர்தசாகரர் - யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை
* பிங்கல முனிவர்

1000

* இளம்பூரணர்
* பட்டினத்தார்
* செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
* குணசாகரர் - (1015-1040) - யாப்பருங்கல உரையாசிரியர்
* நாதமுனிகள் - நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர்.
* கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்தபுராணம் இயற்றியவர்
* நம்பியாண்டார் நம்பி - திருமறை நூற்தொகுப்பு

1100

* பவணந்தி - நன்னூல் இயற்றியவர்
* ஒட்டக்கூத்தர்
* கம்பர்
* புகழேந்தி
* புத்தமித்திரன் வீரசோழியம் இயற்றியவர்; சமணர், வீரசோழன் (ஆட்சி 1063-70) காலத்தவர்.
* பெருந்தேவன் (உரையாசிரியர்) வீரசோழிய உரையாசிரியர் (சமணர்)
* பேராசிரியர் - தொல்காப்பியம் உரையாசிரியர்
* திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்
* நாற்கவிராச நம்பி - நம்பி அகப்பொருள்
* குணவீர பண்டிதர் - நேமிநாதம்

1200

* சேனாவரையர்
* பொய்யாமொழிப் புலவர்
* சேக்கிழார்
* மெய்கண்ட தேவர்
* உமாபதி சிவாச்சாரியார்
* வேதாந்த தேசிகர்

1300

* பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
* இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
* சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு
* நமச்சிவாய மூர்த்திகள் - திருவாடுதுறை ஆதீனம் நிறுவியவர்.

1400

* அருணகிரிநாதர்
* வில்லிபுத்தூரார் - பாரதம் இயற்றியவர்
* காளமேகம்
* சட்டைநாத வள்ளல் (1475-1500). சிவஞான வள்ளலின் மாணாக்கர், சதாசிவரூபம் நூல் எழுதியவர். 626 அடிகள் உள்ள அகவற்பா. சீகாழிக்காரர்.
* சிவஞான வள்ளல், கண்ணுடைய வள்ளலின் மாணாக்கர். 20 நூல்கள் கொண்ட ஞானநூல் தொகுதி, கொல்லாமையை வற்புறுத்தி பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை.
* சிவப்பிரகாசர், மதுரை காலம் ~1488. உரையாசிரியர், இவருக்கு முன் இருந்த 20 ஆசிரியர்களைப் பற்றி அறியத்தருவது.
* திருநெறி விளக்க ஆசிரியர் (சிவாலய முனிவரின் மாணாக்கர்) 1400-1425.
* காளிமுத்தம்மை வருண குலாதித்தன் மடல் நூலாசிரியை. காளமேகப்புலவர் காலம். ஈடற்ற காமச்சுவை, கவிச்சுவை நூல் என்பர். மடலூர்தலுக்கு இணையற்ற நூல் என்பர் (தமிழ்க் கலைகளஞ்சியம்).
* வீரராகவ முதலியார், முத்தமிழ்க்கவி 15 ஆவது நூற்றாண்டு.. நூல்கள்: திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ண மங்கைமாலை, வரதராசர் பஞ்சரத்தினம், பாலூர்க் கலம்பகம், செய்யூர்ப் பிள்ளைத்தமிழ், தனிப்பாடல்கள்.
* அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகாரம் உரையாசிரியர்
* கயாதர முனிவர்
* காளமோகப்புலவர் - யமகண்டம், பிரப்பிரம்ம விளக்கம், சித்திரமடல்
* அகப்பேய்ச் சித்தர்
* பரஞ்சோதி - திருவிளையாடற் புராணம்

1500

* நச்சினார்க்கினியர்
* அநதாரியப்ப முதலியார் (1564) சுந்தரபாண்டியம் (நூல்) என்னும் நூலாரிசியர் 3000 பாடல்கள். 2034 கிடைத்துள்ளன
* தத்துவபோதகர் (Rev. de Nobil) (1577 - 1747)
* புகழேந்தி
* அதிவீரராம பாண்டியர்
* ஹென்றீக் ஹென்றீக்கஸ் - 1554 - முதலில் அச்சு இயந்திரம் கொண்டு தமிழ் நூல் பதிப்பித்தவர்.
* மண்டலபுருடர், வீரை என்னும் வீரபுரம், சூடாமணி நிகண்டு, திருப்புகழ் புராணம், சூடாமணி உள்ளமுடையான் கிருட்டின தேவராயர் காலத்தவர் (மு. இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி பக். 483)
* வண்ணப் பரிமளப் புலவர் - ஆயிர மசலா - முதல் இஸ்லாமிய தமிழிலக்கியம் - 1572
* ஆலிப் புலவர் - புலவர் சிரோன்மணி - மிஃராஜ் மாலை
* பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற்புராணம்

1600

* அரசகேசரி
* கனகவிராயர் - ஷேகு நயினார்கான் - கனகாபிஷேக மாலை எழுதியவர்
* உமறுப் புலவர் - சீறாப் புராணம்
* அருளையர் (1659) தாயுமானவரின் சின்னம்மாவின் மகன். கிடைத்துள்ள பாடல்கள் சில.
* வீரமா முனிவர் (1680 - 1747)
* சீகன் பால்க் (1683 - 1719) - Ziegenbalg, Bartholomaeus (1683 - 1719)
* குமரகுருபரர்
* படிக்காசுப்புலவர்
* நல்லாப்பிள்ளை
* வேலைய சுவாமி 17 ஆம் நூற்றண்டு; துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியின் தம்பி, நல்லூர்ப்புராணம், வீரசிங்கநாதன் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, சீகாளத்தி புராணத்தில் கடைசி 12 சுருக்கங்கள்
* வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்கம், திருவாரூர் பன்மணிமாலை, நல்லூர்ப்புரானம், மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
* வேங்கட நாதர்
* வைத்தியநாத முனிவர் யாழ்ப்பாண அளவெட்டி ஊரினர். வியாகிரபாத புராணம் (தமிழ்ப் புலவர் சரிதம்) பாடியவர்.
* காசீம் புலவர் - நபிகள் நாயகத்தை பாட்டுத் தலைவராக கொண்டு திருப்புகழ் இயற்றியவர்.
* வரத பண்டிதர்
* வராத்துங்க ராம பாண்டியன் - இன்ப விளக்கநூல் - கோக்கோகம்

1700

* சேகாதிநயினார் - திருமணக்காட்சி காப்பியம் இயற்றியவர்
* பனீ அகமது மரைக்காயர் - சின்ன சீறா காப்பியம் இயற்றியவர்
* ரேனியஸ் (1790 - 1838 ?)
* தாயுமானவர் (1705 - 1742)
* பாடுவார் முத்தப்பர் (1767 - 1829)
* அரங்கநாதக் கவிராயர், அட்டாவதானம் (~1753) 2477 பாடல்களில் பாரதம் பாடினார்
* அட்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் எழுதிய சமுத்திர வருணனை
* அந்தோணிக்குட்டி அண்ணாவியார் தூத்துக்குடி, கிறிஸ்தவ இசைக் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
* வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வேதநாயகர், 1774 - 1864)
* சிவஜான முனிவர் (1785)
* காஞ்சிபுரம் இராமசாமியார் (1735 - 1817)
* ஆளவந்தார், வீரை. 18 ஆவது நூற்றாண்டு. ஞானவசிட்டத்தை செந்தமிழ் விருத்தத்தில் பாடினார்.
* இராமநாத கவிராயர், ஆழ்வார் குறிச்சி. 18 ஆம் நூற்றாண்டு (ஆறை அழகப்ப முதலியார் 1676-1780 காலத்தில் வாழ்ந்தவர்)
* இலக்குமண பாரதியார் பிறப்பு 1768-1859. சிவமலைக் குறவஞ்சி, தமிழ் இசைப்பாடல்கள் பாடியுள்ளார்
* கந்தசாமிப் புலவர், முத்தாலங்குறிச்சி, திருவனந்தபுரம் நொண்டி நாடகம், கட்டபொம்மு காலத்தவர்.
* கவிராஜ பண்டிதர், திருச்செங்கோட்டுப் புராணம் பாடினார். இவர் தந்தையார் காசித்தல புராணம் பாடினார்.
* பெப்ரீசியஸ் Fabricius, Johann Philip (1711-1791) முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர்
* பிலிப்பு தெ மெல்லோ (1723-1790)
* மிரோன் வின்சுலோ (1789-1864)
* திரிகூடராசப்பக் கவிராயர் - திருக்குற்றாலக் குறவஞ்சி

1800

* ஆனை-ஐயா இருவர், (1800-1832) இசைப்பாடல்கள் இயற்றினர். மகா வைதியநாதையருடைய குரு.
* ஆலால சுந்தரம் பிள்ளை (1852-1922), காஞ்சி
* அரங்கப்பிள்ளை கவிராயர் "அரிச்சந்திர விலாசம்" எழுதியவர் 1867ல் வெளியாகியது
* கால்டுவெல் (1814-1891)
* ஜி. யு. போப் (1820 - 1907)
* எல்லிஸ் (1819)
* அங்கமுத்துப் புலவர் (கடிகை அங்கமுத்துப் புலவர்) ~ 1808, 219 பாடல்கள் கொண்ட நூலாசிரியர்.
* மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1876)
* ஆறுமுக நாவலர் (1822 - 1879)
* வேதநாயகம் பிள்ளை (1826 - 1889)
* அசலாம்பிகை அம்மை, பண்டிதை, பிறப்பு 1875, ஆனந்தபோதினி இதழில் எழுதியவர்.
* பூவாளூர் தியாகராசச் செட்டியார் (1826 - 1888 )
* எச். ஏ. கிருஷ்ணபிள்ளை (1827 - 1900)
* இராமலிங்க அடிகளார்
* சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901)
* இராசகோபால பிள்ளை, கோமளபுரம், 1869ல் தொல்காப்பியம் வெளியிட்டார்; பல நூல்கள்.
* மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836 - 1864)
* முகவை பொன்னுசாமித் தேவர் (1837 - 1870)
* தண்டபாணி சுவாமிகள் (1839 - 1899)
* சர்க்கரை வீ. செந்தில்வேலு முதலியார் (1842 - 1911)
* பாம்பன் சுவாமிகள் (1851 - 1929)
* பூவை கலியாணசுந்தர முதலியார் (1854 - 1918 )
* நரசிம்மலு நாயுடு (1854 - 1922)
* உ. வே. சாமிநாதையர் (1855 - 1942)
* வீ. கனகசபை பிள்ளை (1855 - 1906)
* பெ. சுந்தரம்பிள்ளை (1855 - 1897)
* ஆ. சிங்காரவேலு முதலியார் - (1855-1932) அபிதான சிந்தாமணி
* சிந்நயச் செட்டியார் (1855 - 1900)
* சொக்கலிங்க ஐயா (1856 - 1931)
* கார்த்திகேய முதலியார் (1857 - 1916)
* வெ. ப. சுப்பிரமணிய முதலியார் (1857 - 1942)
* ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1930)
* கல்லடி வேலுப்பிள்ளை (1860 - 1944)
* அ. நாராயணசாமி ஐயர் (1862 - 1914)
* கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936)
* செல்வக்கேசவராய முதலியார் (1864 - 1921)
* தி. இலக்குமணப் பிள்ளை (1864- 1950)
* அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891)
* மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை (1866 - 1947)
* சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)
* பாண்டித்துரைத் தேவர் (1867 - 1911)
* சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1862 - 1915)
* பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)
* இரா. இராகவையங்கார் (1870 - 1946)
* நா. கதிரவேற்பிள்ளை (1871 - 1907)
* சுப்பிரமணிய சிவா (1871 - 1925)
* பா. வே. மாணிக்க நாயக்கர் (1871 - 1931)
* வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936)
* ஞானியார் அடிகள் (1873 - 1942)
* பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964)
* செய்குத்தம்பிப் பாவலர் (1874 - 1950)
* தேசிகவிநாயகம் பிள்ளை (1876 - 1954)
* கா. நமச்சிவாயம் (1876 - 1936)
* மறைமலை அடிகள்
* எஸ். வையாபுரிப்பிள்ளை (1891-1956)
* ந. மு. வேங்கடசாமி
* ரா. வேங்கடாசலம் பிள்ளை
* ரா. பி. சேதுப்பிள்ளை
* கா. சுப்பிரமணியப் பிள்ளை
* நாவலர் சோமசுந்தரப் பாரதியார்
* மு. இராகவையங்கார்
* அயோத்தி தாசர்
* இராமசாமிக் கவிராயர் என்னும் பெயரில் 7 பேர் (சேதனப்ப்ட்டு, மதுரை, மிதிலைப்பட்டி, சேற்றூர், உடுமலை, தென்குழந்தாபுரி, மானாமதுரை)
* இராமசாமி செட்டியார் 3 பேர் இருந்தனர் (கானாடு காத்தான், உறையூர், திருவெவ்வுளூர்)
* ஈசுரமூர்த்தியா பிள்ளை மு.பொ, திருநெல்வேலி, "நாட்டுப்பெண் கும்மி", நீதி நெறித் தாலாட்டு"..
* உலகநாத சுவாமி திருவிடைமருதூர், ரிபு கீதை எழுதியவர், 1924 பாடல்கள் மற்றும் பல..
* உலகநாத பிள்ளை, ஆராய்ச்சிப் பெரும்புலவர், இறப்பு 1941.
* தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (1892-1960) சோழர் வரலாறு முதலிய பல நூலக்ள்.
* சி. வை. தாமோதரம்பிள்ளை

1900

* வ. ராமசாமி (வ.ரா.) (1889-1951)
* தேவநேயப் பாவாணர் (1902- 1981)
* பாரதி (1882 - 1921)
* பாரதிதாசன் (1891 - 1964)
* கி. ஆ. பெ. விசுவநாதம் - (1899 - 1994)
* நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை (1876 - 1954)
* ந. பிச்சமூர்த்தி
* சி. பா. ஆதித்தனார் - (1905 - 1981)
* புதுமைப்பித்தன் (1906-1948 )
* கல்கி (1899 - 1954)
* புலவர் குழந்தை (1906 - 1978 )
* கொத்தமங்கலம் சுப்பு (1910 - 1974)
* அ. சிதம்பரநாதன்
* மு. வரதராசனார்
* சி. இலக்குவனார்
* மா. இராசமாணிக்கனார்
* சதாசிவ பண்டராத்தார்
* திரு. வி. கல்யாணசுந்தரனார்
* ம. பொ. சிவஞானம்
* வண்ணதாசன் (1915 - 1974)
* கம்பதாசன் (1916 - 1964)
* லா. ச. ராமாமிர்தம் (1916 - 2007)
* பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(1930 - 1959)
* எஸ். டி. சுந்தரம் (1922 - 1979)
* கா.அப்துல் கபூர் (1924 - 2002)
* பெருஞ்சித்திரனார்
* கண்ணதாசன்
* கருணாநிதி
* தனிநாயகம் அடிகள்
* வி. செல்வநாயகம்
* இரா. இளங்குமரனார்
* வா. செ. குழந்தைசாமி
* இன்குலாப்
* கார்த்திகேசு சிவத்தம்பி - (1932)
* எஸ். வையாபுரிப்பிள்ளை
* வைரமுத்து
* கா. அப்துல் கபூர்
2530
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments