தொல்காப்பியம்
by Sanju[ Edit ] 2009-11-10 10:20:18
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும்.
- இது இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும்.
- இதை எழுதியவர்
தொல்காப்பியர் எனப்படுகின்றார்.
- மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
அமைப்பு
தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரம்
1. நூன் மரபு
2. மொழி மரபு
3. பிறப்பியல்
4. புணரியல்
5. தொகை மரபு
6. உருபியல்
7. உயிர் மயங்கியல்
8. புள்ளி மயங்கியல்
9. குற்றியலுகரப் புணரியல்
சொல்லதிகாரம்
1. கிளவியாக்கம்
2. வேற்றுமை இயல்
3. வேற்றுமை மயங்கியல்
4. விளி மரபு
5. பெயரியல்
6. வினை இயல்
7. இடை இயல்
8. உரி இயல்
9. எச்சவியல்
பொருளதிகாரம்
1. அகத்திணையியல்
2. புறத்திணையியல்
3. களவியல்
4. கற்பியல்
5. பொருளியல்
6. மெய்ப்பாட்டியல்
7. உவமவியல்
8. செய்யுளியல்
9. மரபியல்
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்
ஆறு பண்டை உரையாசிரியர்கள்
1. இளம்பூரணர்
2. பேராசிரியர்
3. சேனாவரையர்
4. நச்சினார்க்கினியர்
5. தெய்வச்சிலையார்
6. கல்லாடர்