மனிதக் குரங்கு

by savitha 2009-11-10 11:03:37

மனிதக் குரங்கு



- மனிதக் குரங்கு (ape) என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும்.
- அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதர் இவ் வகையுள் அடங்குபவரே.
- நடைமுறையில் உள்ள வகைப்பாட்டில் இரண்டு ஹொமினோய்டு குடும்பங்கள் உள்ளன:
(அ) ஹைலோபட்டிடே குடும்பம்: இவ்வினங்களுள், லார் கிப்பன், சியாமாங் என்னும் இனங்களும் அடங்கும்.
(ஆ)ஹொமினிடே குடும்பம்: இது ஓராங்குட்டன்கள், கொரில்லாக்கள், சிம்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை "பெரு மனிதக் குரங்குகள்" (great apes) ஆகும்.
- மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின.
- இவற்றின் தாயகம் ஆபிரிக்காவும், ஆசியாவும் ஆகும்.
- இவை அனைத்துண்ணிகள் எனப்படுகின்றன.
- பெரும்பாலான மனிதக் குரங்கு வகைகள் அருகிவிட்டன அல்லது அழியும் தீவாய்ப்பைக் கொண்டுள்ளன.

2267
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments