என் இதயம் இதுவரை சிங்கம் பாடல் வரிகள்

by Geethalakshmi 2010-06-06 12:55:46


என் இதயம் இதுவரை சிங்கம் பாடல் வரிகள்




என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே


சரணம் ௧

கூட்டத்திலே நின்றாலும்
உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும்
உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே
மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம்
வந்தேன் தஞ்சம்
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறடி
இழுத்தாய்

என் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

சரணம் ௨

உன்னிடம் எப்போதும் உரிமையாய்
பழகிட வேண்டும்
பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும்
தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என்நெஞ்சில்
இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய்
படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக் கண்டு விழித்தேன்

என் இதயம்

என் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே


Tagged in:

3146
like
3
dislike
0
mail
flag

You must LOGIN to add comments