தமிழ்ப் பழமொழிகள்

by Rekha 2009-11-10 16:19:00

தமிழ்ப் பழமொழிகள்

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
* ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
* ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
* ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
* ஆழமறியாமல் காலை விடாதே.
* ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் (மருவி ஆயிரம் பேரைக் கொண்டவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது)
* இடுக்கண் வருங்கால் நகுக
* உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
* ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* எடுத்தேன் கவிழ்த்தேன்
* எலி எண்ணைக்கு அழறது எலிப்புழுக்கை எதற்கு அழறது?
* எள் என்றால் எண்ணையாய் நிற்பான்
* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
* ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்
* கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
* கண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.
* கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது
* கழனி பானையில் கைவிட்டமாதிரி
* கனியை விட்டு காயைத் தின்பாளா?
* காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
* கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை
* குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்.
* குரைக்கிற நாய் கடிக்காது
* குமர் தனியப் போனாலும் கொட்டாவி தனியப் போகாது.
* கீரை மசிச்ச சட்டியிலே ரஸம் வச்சமாதிரி
* தனிமரம் தோப்பாகுமா?
* துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்.
* துள்ளற மாடு பொதி சுமக்காது
* பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது.
* பசி வந்திடப் பத்தும் பறந்திடும்.
* புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
* பெத்த வயத்திலே பிரண்டையைக் கட்டிக்கொள்
* பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்குவானேன்?
* விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு அறுவடையை நினைக்கலாமா
* வெட்டிண்டுவா என்றால் கட்டிண்டு வருவான்
* வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல
* நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை.
2666
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments