பாண்டியர் - மூவேந்தர்களுள் ஒருவராவர்
by Nirmala[ Edit ] 2009-11-10 16:34:18
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
மன்னன் | ஆட்சிக்காலம் |
மாறவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1314-1346 |
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1315-1347 |
மாறவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1334-1380 |
மாறவர்மன் பரக்கிரம பாண்டியன் | கி.பி. 1335-1352 |
பாண்டியர் காலத்து நாடுகள்
இரணிய முட்டநாடு | குடநாடு | புறப்பறளைநாடு | ஆரிநாடு | களக்குடி நாடு | திருமல்லிநாடு |
தென்புறம்புநாடு | கருநிலக்குடிநாடு | வடபறம்புநாடு | அடலையூர்நாடு | பொங்கலூர்நாடு | திருமலைநாடு |
தென்கல்லகநாடு | தாழையூர்நாடு | செவ்விருக்கைநாடு | கீழ்ச்செம்பிநாடு | பூங்குடிநாடு | விடத்தலைச்செம்பிநாடு |
கீரனூர்நாடு | வெண்புலநாடு | களாந்திருக்கைநாடு | பருத்திக் குடிநாடு | அளநாடு | புறமலை நாடு |
துறையூர்நாடு | துருமாநாடு | வெண்பைக் குடிநாடு | இடைக்குளநாடு | நெச்சுரநாடு | கோட்டூர்நாடு |
சூரன்குடிநாடு | பாகனூர்க்கூற்றம் | ஆசூர்நாடு | தும்பூர்க்கூற்றம் | ஆண் மாநாடு | கீழ்வேம்பநாடு |
மேல்வேம்பநாடு | தென்வாரிநாடு | வடவாரிநாடு | குறுமாறைநாடு | குறுமலைநாடு | முள்ளிநாடு |
திருவழுதிநாடு | முரப்புநாடு | தென்களவழிநாடு | வானவன் நாடு | கீழ்களக்கூற்றம் | கானப்பேர்க்கூற்றம் |
கொழுவூர்க்கூற்றம் | முத்தூர்க்கூற்றம் | மிழலைக்கூற்றம் | மதுரோதயவளநாடு | வரகுண வள நாடு | கேளர சிங்கவளநாடு |
திருவழுதி வளநாடு | வல்லபவள நாடு | பராந்தகவள நாடு | அமிதகுண வளநாடு |